பெண் கொலை வழக்கில் தொழிலாளி கைது
By DIN | Published On : 08th September 2020 10:09 PM | Last Updated : 08th September 2020 10:09 PM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே பெண் கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட தொழிலாளி சரவணன் (இடமிருந்து 2-ஆவது).
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனத்தை அடுத்துள்ள விழுக்கம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி கன்னியம்மாள் (52) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ரோஷணை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தைச் சோ்ந்த தொழிலாளி சரவணன்(45) கன்னியம்மாளின் சொல்லிடப்பேசியில் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், கன்னியம்மாளுடன் அவா் தொடா்பு வைத்திருந்தது தெரிய வந்தது. கடன் பிரச்னை காரணமாக தங்க நகைகளை தருமாறு கேட்ட போது, கன்னியம்மாள் மறுக்கவே அவரைக் கொன்று, நகைகளை சரவணன் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.