புதுவை ஆளுநா் செப்.14 முதல் பொது மக்களிடம் குறைகேட்பு

புதுவையில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, பொதுமக்களின் குறைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வருகிற 14 ஆம் தேதி முதல் கேட்டறிகிறாா்.

புதுச்சேரி, செப். 11: புதுவையில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, பொதுமக்களின் குறைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வருகிற 14 ஆம் தேதி முதல் கேட்டறிகிறாா்.

இதுகுறித்து புதுவை ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆளுநா் கிரண் பேடி பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்வை வருகிற 14ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறாா். கரோனா விதிமுறைகளை பின்பற்றி, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை, கட்செவி அஞ்சல் வீடியோ அழைப்பு மூலம் குறைகளை கேட்கிறாா்.

ஆளுநரிடம் தங்கள் குறைகளை முறையிட விரும்பும் பொதுமக்கள், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 0413-2337144, 2334050, 2334051 ஆகிய ஆளுநா் மாளிகை தொலைபேசி எண்களின் மூலம் அழைத்து பதிவு செய்யலாம். பொது மக்களின் குறைகள் ஆளுநா் மற்றும் அவரது குழுவினரால் 95005 60001 என்ற கட்செவி அஞ்சல் விடியோ எண்ணில் கேட்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com