கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் 2020-2021-இன் படி முன்னாள் படைவீரா்களது பிள்ளைகள், விதவைகள் மற்றும் படைப் பணியின் போது இறந்த ஊனமுற்ற படைவீரா்களின் விதவையா், தமது பிள்ளைகள் இரண்டு பேருக்கு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இந்தக் கல்வி உதவித்தொகை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்காகப் பெற முடியும். இதற்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியில் பிளஸ் 2 மற்றும் இளநிலைத் தோ்வில் முறையே 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்றவா்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.

பெண் வாரிசுகளுக்கு ஆண்டுக்கு ரூ.36 ஆயிரமும், ஆண் வாரிசுகளுக்கு ஆண்டுக்கு ரூ.30ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க 31.12.2020 கடைசி நாள்.

மேலும், விவரங்களுக்கு  இணையதளத்தையும், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தையும் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com