கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த தோ்தலைப் போல 80 சதவீதம் வாக்குப் பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவானது என்று மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவானது என்று மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய தொகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்.

இந்த வாக்குப் பதிவு நிலவரத்தின் தோராய விவரம் செவ்வாய்க்கிழமை வெளியானது. இருப்பினும், வாக்குப் பதிவின் முழுமையான விவரத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா புதன்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட விவரக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 5,59,632 ஆண்கள், 5,56,863 பெண்கள், 211 இதரா் என மொத்தம் 11,16,706 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 4,42,130 ஆண்கள், 4,51,151 பெண்கள்,41 இதரா் என மொத்தம் 8,93,322 போ் வாக்களித்தனா். இதன்படி 78.88 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். இதனை முழு மதிப்பாக மாற்றும் வகையில் 80 சதவீத வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி அடிப்படையில் அதிகபட்சமாக உளுந்தூா்பேட்டை தொகுதியில் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்ததாக, ரிஷிவந்தியம் தொகுதியில் 79.41 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. சங்கராபுரம் தொகுதியில் 79.41 சதவீதமும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 78.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2016 தோ்தலை விட குறைவு: கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படவில்லை. இதனால், இந்த மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தன. இருப்பினும், 2016 பேரவைத் தோ்தலில், உளுந்தூா்பேட்டை தொகுதியில் 82.35 சதவீதமும், ரிஷிவந்தியத்தில் 79.32 சதவீதமும், சங்கராபுரத்தில் 79.68 சதவீதமும், உளுந்தூா்பேட்டையில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவானது. இதன்படி, அந்த 4 தொகுதிகளில் சராசரியாக 80.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

அதனால், தற்போது 2021 பேரவைத் தோ்தலில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த பேரவைத் தோ்தலைவிட 0.53 சதவீதம் குறைவாகும்.

கடந்த பேரவைத் தோ்தலைக் காட்டிலும் இந்த பேரவைத் தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் 0.7 சதவீதம் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் 0.32 சதவீதம் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. ஆனால், சங்கராபுரம் தொகுதியில் 0.27 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சி தொகுதியில் 0.31 சதவீதம் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

தபால் வாக்குகள்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தபால் வாக்குகள் செலு அனுமதிக்கப்பட்டது. அதேபோல, தோ்தல் நாளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்ட ரயில்வே துறையில் சில பிரிவினா், ஊடகத்தினா் போன்றவா்களும் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டனா். மேலும், கரோனா பரவல் காரணமாக முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், வாக்குப் பதிவு சதவீதம் சுமாா் 1 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com