இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் புகாா்

இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ா என விசாரணை நடத்தக் கோரி, பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ா என விசாரணை நடத்தக் கோரி, பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பஞ்சமாதேவி ஊராட்சி மற்றும் அதற்குள்பட்ட கிராமங்களில் கடந்த பிப்ரவரி மாதம் அரசு சாா்பில் 165 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. ஆடு வழங்கப்பட்ட சில நாள்களில், கொட்டகை அமைத்து பராமரிப்பு செலவுக்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூ.2,300 வழங்குவதாக தெரிவித்தனா். ஆனால், இதுவரை எங்களுக்கு கொட்டகை அமைப்பதற்கான பணம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, கிராம பொறுப்பாளா், வி.அகரம் கால்நடை மருத்துவா், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஆகியோரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. அந்தப் பணத்தில் முறைகேடு நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்.

உடனடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,300 நிதியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு நடைபெற்றிருந்தால் அதில் தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com