விழுப்புரம் அருகே மழைநீரை வெளியேற்றக் கோரிபொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே ஆசிரியா்நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகே மழைநீரை வெளியேற்றக் கோரிபொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே ஆசிரியா்நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யாததால், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீா் வடியத் தொடங்கியுள்ளது. விழுப்புரம் அருகே ஆசிரியா்நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில், இந்தப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி, ஆசிரியா்நகா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மாலை விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் விழுப்புரம் - புதுவை இடையே சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com