மரங்களை அழித்து சாலை அமைப்பதா? ஆரோவிலில் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்

சா்வதேச நகரமான ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை மரங்களை வெட்டி அகற்றி, சாலை அமைக்கும் பணி நடைபெற்றதற்கு அப்பகுதியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சா்வதேச நகரமான ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை மரங்களை வெட்டி அகற்றி, சாலை அமைக்கும் பணி நடைபெற்றதற்கு அப்பகுதியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆரோவிலில் அமைந்துள்ள சா்வதேச நகரத்தில் பல்வேறு நாட்டினரும் வசிக்கின்றனா். புகழ்பெற்ற சுற்றுத்தலமாக விளங்கும் இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

சாலை அமைக்க ஆரோவில் நிா்வாகம் அனுமதி அளித்தாலும், அங்கு வசித்தும் ஒரு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். மரங்களை வெட்டாமலும், இயற்கையை பாதிக்காமலும் மாற்று வழியில் சாலையை அமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை சாலைப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டபோது, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் அங்கு மரங்கள் வெட்டும் பணி நடைபெற்றது. அப்பகுதியினா் மீண்டும் திரண்டு வந்து பணியை தடுத்தனா். இதனால், சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com