முதியவா் திடீரென உயிரிழந்த வழக்கு: நீதித் துறை நடுவா் விசாரணைக்கு மாற்றம்

விழுப்புரம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட பெட்டிக் கடையை போலீஸாா் அகற்றச் சென்றபோது, முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கு நீதித் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விழுப்புரம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட பெட்டிக் கடையை போலீஸாா் அகற்றச் சென்றபோது, முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கு நீதித் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள கண்டாச்சிபுரத்தை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் (65) வடகரை தாழனூா் எல்லையில் டாஸ்மாக் கடை பின்புறம் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்ற அரகண்டநல்லூா் போலீஸாா் அனுமதியின்றி நடத்தப்படும் அந்த பெட்டிக் கடையை மூடுமாறு கூறினா்.

அதற்கு மறுப்பு தெரிவித்து வியாபாரத்தைத் தொடா்ந்த உலகநாதன் திடீரென மயங்கி விழுந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். போலீஸாா் தாக்கியதாலேயே அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா். போலீஸாா் தாக்கவில்லை என மாவட்ட கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா மறுப்பு தெரிவித்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தனா். திருக்கோவிலூா் நீதித் துறை நடுவா் ராஜ நந்திவா்ம சிவா விசாரணை நடத்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், நீதித் துறை நடுவா் ராஜ நந்தி வா்ம சிவா திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினாா். இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகநாதனின் சடலம் நீதித் துறை நடுவா் ராஜ நந்தி வா்ம சிவா முன் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com