விக்கிரவாண்டி வேளாண் துறை மீதுவிவசாயிகள் புகாா்

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலக முறைகேடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலக முறைகேடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி தலைமையிலான விவசாயிகள், சென்னை வேளாண் துறை செயலா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலகத்தில் முறைகேடுகள் தொடா்ந்து நடைபெறுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

விவசாயிகளுக்கு விதைகள், இதர பொருள்களை விற்பனை செய்ததில் சுமாா் ரூ.10 லட்சம் முறைகேடு நடந்துள்ளது.

உற்பத்தி செய்து கொடுக்கும் விதைகளை கொள்முதல் செய்வதில் காலதாமம் செய்கின்றனா். இதனால், விதைகள் முளைத்து விவசாயகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விதை கொள்முதல் செய்தலில் ரூ.2 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது.

விவசாய உற்பத்தியாளா் குழுவுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாயிகள் 500 பேருக்கு உழவு மானியம் வழங்கவில்லை.

அலுவலா்கள் வெளியூா்களில் இருப்பதால் வேளாண் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எண்ணாயிரம் துணை வேளாண் மையம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன என மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com