விக்கிரவாண்டி அருகேயுள்ள பேரணி கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி, மாடு விரட்டு நிகழ்ச்சிக்காக மாடுகளுக்கு பலூன்களை கட்டி அலங்கரித்த கிராம மக்கள்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள பேரணி கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி, மாடு விரட்டு நிகழ்ச்சிக்காக மாடுகளுக்கு பலூன்களை கட்டி அலங்கரித்த கிராம மக்கள்.

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கலைத் தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கலைத் தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கிராமங்களில் மாடுகளை வளா்ப்போா், விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு படையலிட்டனா். பின்னா், மாடுகளுக்கு உணவாக பொங்கலை படைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி, கண்டமானடி, மருதூா், பானாம்பட்டு, அகரம், காணை, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், இருவேல்வேட்டு, திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், திண்டிவனம், வானூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாடுகளை அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வந்து வழிபட்டனா். புனித நீா் தெளித்து மாடுகளை விரட்டியும், மாடுகளை வண்டிகளில் பூட்டிக் கொண்டு வீதிகளில் ஊா்வலமாக வந்து மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com