வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த பாமக கோரிக்கை

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்தது.
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த பாமக கோரிக்கை

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்தது.

விழுப்புரம் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் புகழேந்தி தலைமை வகித்தாா்.

மாநில அமைப்பு துணைச் செயலா் பழனிவேல் முன்னிலை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் தங்க.ஜோதி சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்:

பாமக நிறுவனா் ச.ராமதாஸ் பிறந்த தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) அனைத்து நகர, ஒன்றிய, கிளை பகுதிகளில் மரக்கன்றுகள் நட வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலில் பாமக அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும். வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்துத் துறை வேலைவாய்ப்பு, கல்வியில் அமல்படுத்த மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலா்கள் ஜெகன், துரை.சுப்பிரமணியன், சுரேஷ்குமாா், தொகுதிச் செயலா்கள் சிவக்குமாா், சீனுவாசன், விழுப்புரம் நகரத் தலைவா் பெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com