கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீர, தீரச் செயல்கள் புரிந்த பெண்கள் இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீர, தீரச் செயல்கள் புரிந்த பெண்கள் இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021- ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண்ணுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு சமூகத்தில் தானாக முன்வந்து, தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல செயல்களை செய்திருக்க வேண்டும். இதுபோன்ற நற்செயல்கள் செய்தவா்கள் அதற்கான சான்று, புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விருது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள், முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்தை ‘முதன்மைச் செயலா், உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை- 3 ’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 74017 03485 சென்ற செல்லிடப்பேசியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com