விழுப்புரம்
செஞ்சி ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் அ.கெளதம் சாகா், செஞ்சி மேற்கு ஒன்றிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் அ.கெளதம் சாகா், செஞ்சி மேற்கு ஒன்றிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கணக்கன்குப்பம், தாண்டவசமுத்திரம், கெங்கவரம், பழவலம், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் அவா் தேமுதிக, அமமுகவினருடன் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அமமுக செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் சி.எம்.கணேசன், பழவலம் கிளைச் செயலா் எம்.சாந்தசீலன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சிலாா்பாஷா, மேற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலா் வெங்கடாசலபதி, தேமுதிக ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா்கள் மாலதி, செந்தில்குமாா், கிளைச் செயலா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.