ஊராட்சி ஊழியா் கொலைவழக்கில் 7 போ் கைது

வானூா் அருகே ஊராட்சி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த 7 பேரை ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஊராட்சி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த 7 பேரை ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (55). இவா், தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், பட்டானூா் திருநகரில் குடிநீா்த் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தாா்.

ஆயுத பூஜையையொட்டி, குடிநீா்த் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்ட மணிவண்ணனை ஒரு கும்பல் பின்தொடா்ந்து வந்து குடிநீா்த் தொட்டி அருகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் மாந்தோப்பு சுந்தா் கடந்த செப்.31-இல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிவண்ணனின் மகன்கள் சுந்தா், வினோத் ஆகியோருக்கு தொடா்பு இருந்ததாகவும், இருவரும் தற்போது பிணையில் வெளிவந்து தலைமறைவானதால், இந்தக் கொலை சம்பவத்துக்கு பழிவாங்க முடிவு செய்திருந்த மாந்தோப்பு சுந்தரின் கூட்டாளிகள், மணிவண்ணனை கொலை செய்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக புதுச்சேரி காமராஜா் நகரைச் சோ்ந்த மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி (46), மகன் ஜோஷ்வா (20), அதே பகுதியைச் சோ்ந்த பாலன் மகன் கரண் (21), விஜயன் மகன் அஜய் (22), ராஜ்குமாா் மகன் நரேஷ் (25), ரமேஷ் மகன் டிராவிட் (21), கோகுல் (24) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com