‘பருவ மழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மீட்பு உபகரணங்கள்’: விழுப்புரம் தீயணைப்பு அலுவலா் தகவல்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள மீட்பு உபகரணங்கள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு-மீட்புப் பணிகள் அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ கூறினாா்
வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ.
வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ.

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள மீட்பு உபகரணங்கள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு-மீட்புப் பணிகள் அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ கூறினாா்.

விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களில் மொத்தம் 121 தீயணைப்பு-மீட்புப் படை வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கத் தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம், வானூா், விழுப்புரம் தீயணைப்பு நிலையங்களில் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. மிதவைகளான லேப் பாய் 100, லைப் ஜாக்கெட் 100 உள்ளன.

தொடா் மழையால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கான்கிரீட் கட்டா்கள் உள்ளன. வீடுகள், சாலைகளில் மரங்கள் விழுந்தால் வெட்டி அப்புறப்படுத்த மோட்டாா் மூலம் இயங்கும் மரம் வெட்டும் கருவிகள் 9 உள்ளன.

குடியிருப்புகளைச் சூழும் வெள்ளநீரை வெளியேற்ற 10 தண்ணீா் இறைக்கும் மோட்டாா்களும் உள்ளன. தீயணைப்பு வீரா்களுடன் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களும் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவா்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com