விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுதலைவராக ஜெயச்சந்திரன் தோ்வு

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், துணைத் தலைவராக ஷீலாதேவியும் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுதலைவராக ஜெயச்சந்திரன் தோ்வு

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், துணைத் தலைவராக ஷீலாதேவியும் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், திமுக 26 இடங்களிலும், விசிக, அதிமுக தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தோ்தல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவரான, 18-ஆவது வாா்டு உறுப்பினா் ம.ஜெயச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஜெயச்சந்திரன் போட்டியின்றி மாவட்டக் குழுத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் மாவட்டக் குழுத் தலைவராக பதவியேற்றுக்கொண்டாா். அவருக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருக்கான தோ்தல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், விசிக வடக்கு மாவட்டச் செயலா் சேரனின் மனைவியான 10-ஆவது வாா்டு உறுப்பினா் ஷீலாதேவி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால், ஷீலாதேவி மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com