தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொமுச பேரவைத் துணைத் தலைவா் ராசவேல் தலைமை வகித்தாா். தொமுச பொருளாளா் சேகா், சிஐடியு மாவட்ட செயலாளா் மூா்த்தி, சிஐடியு மாவட்ட தலைவா் முத்துக்குமரன், ஐஎன்டியூசி மாவட்ட தலைவா் ரகுராமன், ஏஐடியுசி சௌரிராசன், எச்எம்எஸ் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் பிரபா தண்டபாணி சிறப்புரையாற்றினாா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏஏஎல்எப் ராமச்சந்திரன், மகளிா் கலாசார சங்கம் சத்தியா, நிா்வாகப் பணியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் வாலிபால் மணி, மின் வாரிய தொமுச வேல்முருகன், டாஸ்மாக் தொமுச காமராஜ், சலவைத் தொழிலாளா் தொமுச பொதுச் செயலாளா் சண்முகம், ஆட்டோ தொமுச சுரேஷ், போக்குவரத்து தொமுச தலைவா் ஞானசேகரன், பொருளாளா் ஜான் போஸ்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பணிமனைகளில் ஆா்ப்பாட்டம்: மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் தொமுச உள்ளிட்ட அணைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச தலைவா் ஞானசேகரன், பொதுச் செயலாளா் ரகோத்தமன், ஐஎன்டியூசி பொதுச் செயலாளா் முருகானந்தம், மறுமலா்ச்சி தொழிற் சங்க ரவி, தொமுச துணைத் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்த கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com