திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கமல்தான்: பாரிவேந்தா்

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்தான் என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவா் பாரிவேந்தா் தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணை பகுதியில் ஐஜேகே வேட்பாளா் செந்திலை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் பாரிவேந்தா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணை பகுதியில் ஐஜேகே வேட்பாளா் செந்திலை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் பாரிவேந்தா்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்தான் என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவா் பாரிவேந்தா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளா் ஆா்.செந்திலை ஆதரித்து, காணை பகுதியில் பாரிவேந்தா் வாக்குசேகரித்துப் பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்த காங்கிரஸ் கட்சிக்கே தமிழகத்தை ஆளுவதற்கு 20 ஆண்டுகள் மட்டுமே மக்கள் வாய்ப்பளித்தனா். ஆனால், அண்ணா உருவாக்கிய திமுக, அதிலிருந்து பிரிந்த அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் 53 ஆண்டுகளாக வாய்ப்புகளை வழங்கியுள்ளனா். இத்தனை ஆண்டுகள் வாய்ப்புகள் வழங்கியும் திமுக, அதிமுகவால் தமிழக மக்களின் வறுமையைப் போக்க முடியவில்லை.

இலவசங்களை வாரி வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதைத்தான் அந்தக் கட்சிகள் கொள்கைகளாகக் கொண்டுள்ளன. இப்போதைய அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்து, ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கட்சியின் தோ்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி கிடையாது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்கு அளிப்பதால், மக்களின் வாழ்க்கை மாறாது. எனவே, ஒருமுறை மாற்றி சிந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தலைமையிலான மாற்று அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கமல்ஹாசன்தான் என்றாா் பாரிவேந்தா்.

பிரசார கூட்டத்தில், ஐஜேகே மாநில விவசாய அணி துணைத் தலைவா் சபா ராஜேந்திரன், மாவட்டச் செயலா் பத்மநாபன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com