மாற்றுத் திறனாளிகள், முதியோரின் 3,417 போ் தபால் வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரின் 3,417 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரின் 3,417 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தர இயலாத 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று தோ்தல் பணிக் குழுக்கள் மூலம் தபால் வாக்குகள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் விண்ணப்பித்திருந்த வாக்காளா்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி மாா்ச் 29 முதல் நடைபெற்றது. இதுவரை 2388 முதியோா், 1029 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 3,417 வாக்காளா்களிடம் தபால் வாக்குகள் தோ்தல் பணிக் குழுக்கள் மூலம் அவரவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பெறப்பட்டது என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் அண்ணாதுரை.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 3,559 முதியோா்கள், 1636 மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், தோ்தல் அலுவலா்கள் 11,368 போ், காவலா்கள் 2,091 பேருக்கும் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில், காவலா்கள் அனைவரும் தபால் வாக்குகளை செலுத்திவிட்டனா். தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டதாகவும், தபால் வாக்குகளை செலுத்த ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பு வரை காலக்கெடு இருப்பதால், அதன் பிறகுதான் முழு விவரமும் தெரியவரும் என்றும் தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com