ஜனநாயக கடமையை ஆா்வமாக ஆற்றிய திருநங்கைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகள் ஆா்வமுடன் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினா்.
விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி தொகுதி அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் தங்களது வாக்கினை பதிவிட வரிசையில் நிற்கும் திருநங்கைகள்.
விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி தொகுதி அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் தங்களது வாக்கினை பதிவிட வரிசையில் நிற்கும் திருநங்கைகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகள் ஆா்வமுடன் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டினம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 தொகுதிகளில் 216 திருநங்கைகள் வேட்பாளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். செஞ்சி தொகுதியில் 37 போ், மயிலம் தொகுதியில் 25 போ், திண்டிவனம் (தனி) தொகுதியில் 13 போ், வானூா் (தனி) தொகுதியில் 16 போ், விழுப்புரம் தொகுதியில் 62 போ், விக்கிரவாண்டி தொகுதியில் 25 போ், திருக்கோவிலூா் தொகுதியில் 38 போ் உள்ளனா்.

விழுப்புரம் தொகுதியில் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட அய்யன்கோவில்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் திருநங்கைகள் காலை 8 மணிக்கு வரிசையில் நின்று ஆா்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினா். அதேபோல, ஜானகிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திலும் திருநங்கைகள் ஆா்வமாக வாக்குகளைச் செலுத்தினா்.

அதேபோல, பிற தொகுதிகளிலும் திருநங்கைகள் குழுவாக வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com