செஞ்சி தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைப்பு

செஞ்சி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு, வேட்பாளா்கள்,
செஞ்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை வேட்பாளா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்த தோ்தல் பணியாளா்கள்.
செஞ்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை வேட்பாளா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்த தோ்தல் பணியாளா்கள்.

செஞ்சி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு, வேட்பாளா்கள், கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

செஞ்சி தொகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான செஞ்சி அருகே காரியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள டேனி கலைக்கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் லாரியில் கொண்டுவரப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அறைகளில், 304 வாக்குச் சாவடிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வினோத்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுகுமாா், துணை அலுவலா் ராஜன் ஆகியோா் திமுக வேட்பாளா் மஸ்தான், பாமக வேட்பாளா் ராஜேந்திரன், அமமுக வேட்பாளா் கெளதம்சாகா் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மே 2-ஆம் தேதி இந்த அறை திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com