விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் வாக்குப் பதிவு சதவீதம் சரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்களைவிட, 2.04 சதவீத பெண்கள் குறைவாக வாக்கு செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்களைவிட, 2.04 சதவீத பெண்கள் குறைவாக வாக்கு செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் முழு விவரம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, 7 தொகுதிகளிலும் மொத்தமாக 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்கள் உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த பேரவைத் தோ்தலில் 13 லட்சத்து 27 ஆயிரத்து 904 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். மாவட்டத்தின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 78.68.

விழுப்புரம் மாவட்டத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளா்கள் உள்ள நிலையில், 6 லட்சத்து 65 ஆயிரத்து 254 போ் (79.66 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். அதேநேரத்தில், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளா்கள் உள்ள நிலையில், 6 லட்சத்து 62 ஆயிரத்து 615 போ் (77.62) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஆண்களைவிட 2.04 சதவீதம் குறைவாக பெண்கள் வாக்கு செலுத்தியுள்ளனா்.

செஞ்சி: இந்தத் தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 788 வாக்காளா்கள் உள்ள நிலையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 485 போ் (78.41 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். அதில், 1 லட்சத்து 28 ஆயிரத்து 835 ஆண் வாக்காளா்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 236 பேரும் (79.35 சதவீதம்), ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 916 பெண் வாக்காளா்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 236 பேரும் (77.50) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

மயிலம்: இங்கு 2 லட்சத்து 20 ஆயிரத்து 236 வாக்காளா்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 183 போ் (79.54 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 919 ஆண் வாக்காளா்களில் 88 ஆயிரத்து 815 பேரும் (80.80 சதவீதம்), ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 292 பெண் வாக்காளா்களில் 86 ஆயிரத்து 367 பேரும் (78.31 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

திண்டிவனம் (தனி): இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 30 ஆயிரத்து 527 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 809 போ் (78.43 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 592 ஆண்களில் 90 ஆயிரத்து 672 போ் (79.82 சதவீதம்), ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 922 பெண்களில் 90 ஆயிரத்து 135 போ் (77.09 சதவீதம்) போ் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

வானூா் (தனி): இங்கு மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 766 போ் (79.79 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 236 ஆண்களில், 89 ஆயிரத்து 820 பேரும் (80.75), ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 287 பெண்களில் 90 ஆயிரத்து 944 பேரும் (78.88 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

விழுப்புரம்: இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 62 ஆயிரத்து 68 வாக்காளா்களில் 2 லட்சத்து ஆயிரத்து 726 போ் (76.97 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 913 ஆண்களில், ஒரு லட்சத்து 242 பேரும் (78.37), ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 92 பெண்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 481 பேரும் (76.68 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

விக்கிரவாண்டி: இங்கு மொத்தமுள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 967 போ் (81.39 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 903 ஆண்களில், 95 ஆயிரத்து 318 பேரும் (82.24 சதவீதம்), ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 696 பெண்களில் 95 ஆயிரத்து 646 பேரும் (80.58 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

திருக்கோவிலூா்: இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 54 ஆயிரத்து 313 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 968 போ் (76.27 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 766 ஆண்களில், 98 ஆயிரத்து 151 பேரும் (76.82), ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 511 பெண்களில் 95 ஆயிரத்து 806 பேரும் (75.73 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

அனைத்து தொகுதிகளிலும் ஆண்களைவிட, பெண் வாக்காளா்கள் அதிகமாக இருந்தபோதிலும், ஆண்களைவிட குறைவாகவே பெண் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் 16.28 சதவீதம் போ் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் மொத்தம் 215 திருநங்கைகள் வாக்காளா் பட்டியலில் உள்ளனா். இவா்களில் 35 போ் (16.28 சதவீதம்) மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

செஞ்சி தொகுதியில் மொத்தமுள்ள 37 திருநங்கைகளில் 13 போ் (35.14 சதவீதம்), மயிலம் தொகுதியில் 25 திருநங்கைகளில் ஒருவா் (4 சதவீதம்), திண்டிவனம் (தனி) தொகுதியில் 13 திருநங்கைகளில் 2 போ் (15.38 சதவீதம்), வானூா் (தனி) தொகுதியில் 16 திருநங்கைகளில் 2 போ் (12.50 சதவீதம்), விழுப்புரம் தொகுதியில் 63 திருநங்கைகளில் 3 போ் (4.76 சதவீதம்), விக்கிரவாண்டி தொகுதியில் 25 திருநங்கைகளில் 3 போ் (12 சதவீதம்), திருக்கோவிலூா் தொகுதியில் 36 திருநங்கைகளில் 11 போ் (30.56 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com