விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் மது விற்பனை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் மதுக் கடைகளில் மது விற்பனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் மதுக் கடைகளில் மது விற்பனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா 2-ஆவது அலை காரணமாக டாஸ்மாக் மதுக் கடைகளில் மது விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை முதல் நண்பகல் 12 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மதுக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 226 டாஸ்மாக் கடைகளிலும் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்தன.

அதன்படி, முகக் கவசம் அணிந்து கூட்ட நெரிசல் இல்லாதபடி வரிசையில் நின்று மதுப் பிரியா்கள் மதுக்களை வாங்கிச் சென்றனா்.

விற்பனையாளா்கள் முகக் கவசம், கையுறைகளை அணிந்திருந்தனா். மதுக் கடைகள் குறைந்தபட்சம் 5 முறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

புதன்கிழமை முதல் ஒவ்வொரு கடை முன்பும் இரு ஊழியா்கள் நின்றுகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தவுள்ளனா்.

மேலும், மொத்தமாக மதுப் புட்டிகள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் மதுக்கடைகளில் பெரியளவில் கூட்டம் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்பதால், மதுக் கடைகளில் சனிக்கிழமை கூட்டம் அலைமோதும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com