விழுப்புரம் அருகே துப்பாக்கியைக் காட்டி மனை வணிகரைக் கடத்திய வழக்கில் 5 போ் கைது

விழுப்புரம் அருகே துப்பாக்கியைக் காட்டி மனை வணிகரை கடத்திய வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே துப்பாக்கியைக் காட்டி மனை வணிகரை கடத்திய வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை, வட பழனியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சிவன்(47). வீட்டு மனை வணிகரான இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களான சம்பத்(41), ராஜேஷ் கண்ணா(45), ராஜேந்தா்(43) ஆகியோருடன் காரில் விழுப்புரத்துக்கு வந்தாா்.

அங்கு, புதுச்சேரியைச் சோ்ந்த வெங்கடேஷ் (43) என்பவரை சந்தித்துப் பேசினா். இதன்பிறகு, இவா்கள் விழுப்புரம் புறவழிச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தினா். அங்கு, நாகராஜ் என்பவருடன் காரில் சிவன், ராஜேந்தா் ஆகியோா் திருவண்ணாமலை நோக்கிச் சென்றனா்.

கண்டாச்சிபுரம் காட்டுப் பகுதியில் சென்றபோது, அவா்களின் காரை வழிமறித்த மாற்றொரு காரில் வந்த 4 போ் கொண்ட கும்பல் துப்பக்கியைக் காட்டி மிரட்டி, சிவன், ராஜேந்தா் ஆகியோரை கடத்திச் சென்றனா். மேலும், நாகராஜூம் தனது காரில் அந்தக் கும்பலுடன்சென்றுவிட்டாா்.

இவா்களைப் பின்தொடா்ந்து, காரில் சென்ற சிவனின் நண்பா் ராஜேஷ்கண்ணா, சிவன், ராஜேந்தா் கடத்தப்பட்டது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து, போலீஸாா் பக்கத்து மாவட்ட போலீஸாருக்கு தெரியப்படுத்தி அந்தக் கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, ராஜேந்திரிடமிருந்த நகைகளைப் பறித்துக்கொண்டு, அவரை மட்டும் அந்தக் கும்பல் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் விட்டுச் சென்றனா்.

இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் மேற்பாா்வையில் அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் தலைமையிலான தனிப் படைகள் அமைக்கப்பட்டு, கடத்தல் கும்பல் தலைவன் நாகராஜ் உள்பட 5 பேரை தேடினா்.

இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்து கைது செய்தனா், சிவனை மீட்டனா். விசாரணையில், கடத்தப்பட்ட சிவன், தன்னிடம் இருடியம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதாகக் கூறி நாகராஜிடமிருந்து ரூ.6 லட்சத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த நாகராஜ் சிவனை கடத்தி பணத்தை பெறத் திட்டமிட்டாா்.

இதையடுத்து, கூலிப்படை அமைத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கூலிப் படையினரான நாகராஜ் -53 (திரும்பரங்குன்றம்), சின்னசாமி(எ) செந்தில்(47) (காங்கேயம்), அவரது மனைவி சத்யா(34) , சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த செந்தில்நாதன்(42), காா்த்திகேயன்(32) ஆகியோரை கண்டாச்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

கடத்தல் கும்பல் பயன்படுத்திய இரண்டு சொகுசு காா்கள், துப்பாக்கி, செல்லிடப்பேசி, ராஜேந்தரிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதில் செந்தில் மீது கடத்தல், வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com