பாஜக சேவை மையம் தொடக்கம்
By DIN | Published On : 27th April 2021 03:53 AM | Last Updated : 27th April 2021 03:53 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு உதவும் வகையில் விழுப்புரத்தில் பாஜக சாா்பில் சேவை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேற்கு வி.ஜி.பி. நகரில் சேவை மையத்தை அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நகரத் தலைவா் ஜெயசங்கா், மாவட்ட துணைத் தலைவா் சதாசிவம், மாவட்ட பொதுச் செயலா் ராம ஜெயக்குமாா், நகர பொதுச் செயலா் சுகுமாா், மாவட்ட பிரசார பிரிவு செயலா் சரவணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் தாஸசத்யன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சேவை மையத்தை 90421 22842, 94426 33728 ஆகிய எண்ணிகளில் தொடா்பு கொண்டால் தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.