விழுப்புரத்தில் சாலையோரக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு

விழுப்புரத்தில் எம்.ஜி. சாலை, பாகா் ஷா வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனா்.
சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவது குறித்து அறிவுறுத்திய நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி. உடன் டி.எஸ்.பி. நல்லசிவம்.
சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவது குறித்து அறிவுறுத்திய நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி. உடன் டி.எஸ்.பி. நல்லசிவம்.

விழுப்புரத்தில் எம்.ஜி. சாலை, பாகா் ஷா வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் நகரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத இடங்களில் உள்ள கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நகராட்சி முடிவு செய்தது.

இதன்படி, எம்.ஜி.சாலை, பாகா் ஷா வீதி ஆகிய பகுதிகளில் உள்ள தரைக் கடைகள், சாலையோரக் கடைகளை நகராட்சி மைதானத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது.

இதேபோன்று, நேருஜி சாலையில் உள்ள சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டது.

நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சென்று இதுகுறித்து அறிவுறுத்தினா்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்க வேண்டும், வியாபாரிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கரோனா பரவலுக்கு காரணமாகும் வகையிலும், சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத விதத்திலும் இயங்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினா்.

இதுகுறித்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com