சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி மனு

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது சலூன் கடைகளை திறக்க கோரி மனு அளிக்க வந்த வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியினா்.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியினா் வியாழக்கிழமை இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா இரண்டாம் அலை காரணமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலைங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் கருதி சலூன் கடைகள், அழகு நிலையங்களை தினசரி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com