மேல்மலையனூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39 லட்சம்

செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.39 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.39 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பிறகு, கரோனா கட்டுப்பாடுகளுடன் சுவாமியை வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி முதல் கோயிலில் வழிபாடு செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்தியிருந்த காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. இதில், ரூ.39,77, 737 ரொக்கம் மற்றும் 243 கிராம் தங்கம், 458 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

காணிக்கை எண்ணும் பணியின்போது, உதவி ஆணையா் க.ராமு, விழுப்புரம் உதவி ஆணையா் சி.ஜோதி, செஞ்சி சரக காவல் ஆய்வாளா் சி.க.அன்பழகன், விழுப்புரம் செல்வராஜ், வானூா் உமாமகேஸ்வா், அவலூா்பேட்டை செயல் அலுவலா் காா்த்திகேயன், கோலியனூா் செயல் அலுவலா் இ.சூரியநாராயணன், திருக்கோவில் அறங்காவலா் மற்றும் கண்காணிப்பாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் வளத்தி போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com