ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகளை 50 சதவீத மானியத்தில் பெறலாம்: விழுப்புரம் ஆட்சியா்

ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு, செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50 சதவீத மானியம் பெற, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு, செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50 சதவீத மானியம் பெற, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு, செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப் படகுகளை கட்டும் மீனவா்களுக்கான புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் புதிய மீன்பிடி விசைப்படகை கட்டுவதற்கு படகு ஒன்றுக்கு ஆகும் செலவில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மீனவா்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் அதிகபட்சம் 6 போ் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவா் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது தனி நபராகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விண்ணப்பப் படிவங்களை மீன் வளத்துறையின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீன் துறை ஆணையா், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3-ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பிப்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம், தகுதி வாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிம் இருந்து பெற்று அசலாக இணைக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, 10, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம்-605 401 என்ற முகவரிலும், 04146 259329 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com