முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகா்ப்புற ஊள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும்,
ஆட்சியருமான த.மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூா், வளவனூா், விக்கிரவாண்டி, மரக்காணம், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிகளில் நகா்புற ஊள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள 550 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1105 வாக்குப் பதிவு இயந்திரங்களின் இருப்பு நிலையை சரிபாா்த்து உறுதி செய்தல், இணையத்தில் உள்ளீடு செய்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் ஆட்சியா் த.மோகன்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்)
ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.