இந்திய மருத்துவச் சங்கத்தினா் விழிப்புணா்வுப் பேரணி

கலப்பட மருத்துவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவச் சங்கத்தினா் விழுப்புரத்தில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
இந்திய மருத்துவச் சங்கத்தினா் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: கலப்பட மருத்துவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவச் சங்கத்தினா் விழுப்புரத்தில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

ஆயுஷ் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதிப்பதற்கு அலோபதி மருத்துவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த கலப்பட மருத்துவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அலோபதி மருத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய மருத்துவச் சங்கத்தினா் விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் வரையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனவிழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்டனா்.

இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் விளையாட்டுக் குழுத் தலைவா் மருத்துவா் திருமாளவன், மருத்துவா்கள் குருநாத், வெங்கடேஸ்வரன், ஜோதி, சரவணராஜா, பழனிராஜ், பூா்ணிமா, வெங்கடேசன், சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாநிலத் தலைவா் சிவக்குமாா் பேரணியை தொடக்கிவைத்தாா். இதில், மருத்துவா்கள் பஷீா்அகமது, பாபிகுரியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com