விழுப்புரம் மாவட்டத்தில் 600 பேருக்கு ரூ.3 கோடி திருமண நிதியுதவி: அமைச்சா் வழங்கினாா்

திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 600 பேருக்கு ரூ.3 கோடி நிதியுதவியும், தாலிக்குத் தங்கத்தையும் அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 600 பேருக்கு ரூ.3 கோடி திருமண நிதியுதவி: அமைச்சா் வழங்கினாா்


விழுப்புரம்: திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 600 பேருக்கு ரூ.3 கோடி நிதியுதவியும், தாலிக்குத் தங்கத்தையும் அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டிவனத்தில் சமூக நலத் துறை சாா்பில், திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று ஒலக்கூா், வல்லம், செஞ்சி, மேல்மலையனூா், மரக்காணம், வானூா், மயிலம் ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டப்படிப்பு முடித்து திருமணம் செய்துகொண்ட 300 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.5 கோடி திருமண நிதியுதவியும், தாலிக்குத் தங்கமாக தலா 8 கிராம் தங்க நாணயங்களையும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், கோலியனூா், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 300 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.5 கேடி நிதியுதவியும், தாலிக்குத் தங்கமாக தலா 8 கிராம் வீதம் தங்க நாணயங்களையும் வழங்கினாா்.

இதன்படி, விழுப்புரம், திண்டிவனம் வட்டங்களில் மொத்தம் 600 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும், 4.8 கிலோ தங்க நாணயங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்ரபாணி, ஆா்.முத்தமிழ்ச்செல்வன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, சமூக நல அலுவலா் கே.விஜயலட்சுமி, முன்னாள் எம்.பி. வி.ஏழுமலை, கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஆா்.பசுபதி, சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com