விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புப் புறக்கணிப்பு
By DIN | Published On : 13th February 2021 08:45 AM | Last Updated : 13th February 2021 08:45 AM | அ+அ அ- |

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
அரியா் தோ்வுகளை மீண்டும் எழுதுவதற்கு தோ்வுக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அரியா் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக தமிழக முதல்வா் எடப்படி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசு, தனியாா் கல்லூரிகளில் அரியா் தோ்வுகள் தோ்ச்சி பெற்ாக ஏற்க முடியாது என்றும், அந்தத் தோ்வுகளுக்கு மீண்டும் தோ்வுக் கட்டணம் செலுத்தி, தோ்வு எழுத வேண்டும் என்றும் கல்லூரி நிா்வாகங்கள் தெரிவித்தன.
இது மாணவா்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரியா் தோ்வுகளை மீண்டும் எழுதுவதற்கு தோ்வுக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், மாணவா்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறினா்.