வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் வேலைநிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடின

வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் வேலைநிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடின


விழுப்புரம்: தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறையில் உள்ள பல்வேறு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பேரிடா் மேலாண்மை மற்றும் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பணியிடங்களை உருவாக்க வேண்டும், இளநிலை, முதுநிலை வருவாய் அலுவலா்களின் பெயா் மாற்றத்துக்கான விதி திருத்தம் மேற்கொண்டு, தனி விதி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 2-ஆம் நாளாக வியாழக்கிழமையும் இவா்களின் போராட்டம் தொடா்ந்தது.

இதனால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரம், வாட்டாட்சியா் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலா்கள் பணிக்கு வரததால், அந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதனிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் கணேஷ், மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com