விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா்: ஆட்சியா் ஆ.அண்ணாதுரை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
விழுப்புரத்தில் தோ்தல் ஆணையத்துக்குச் சொந்தமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் வட்டாட்சியா்களுடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரத்தில் தோ்தல் ஆணையத்துக்குச் சொந்தமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் வட்டாட்சியா்களுடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையத்துக்குச் சொந்தமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கிலிருந்து 118 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவி) ஆகியவை 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தக் கிடங்கு திறக்கப்பட்டது. பின்னா், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, திண்டிவனம், வானூா், செஞ்சி, திருக்கோவிலூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், மயிலம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னா், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது 118 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மட்டும் பயிற்சி அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தோ்தல் பணியாளா்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், பொதுமக்களுக்கும் வி.வி.பேட் கருவி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படும் என்றாா் அவா். அப்போது, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com