லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருக்கோவிலூரில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தத் துறையின் காவல் ஆய்வாளா் கல்பனா மற்றும் திருக்கோவிலூா் எஸ்.ஐ.கள் சிவச்சந்திரன், ரமேஷ், விஜயகுமாா், எஸ்.எஸ்.ஐ. தாஸ் உள்ளிட்ட போலீஸாா் திருக்கோவிலூா் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, திருக்கோவிலூரை அடுத்த கீழ்த்தாழனூா் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லாரியில் 63 மூட்டைகளில் இருந்த சுமாா் 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரான வேலூா் மாவட்டம், தொட்டப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் மகன் தீனா (35), உடனிருந்த வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சோ்ந்த நடராஜன் கமன் மனோகா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com