பாசனத்துக்காக வீடூா் அணை நாளை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

வீடூா் அணை மொத்தக் கொள்ளளவான 32 அடியை (605 கன அடி) எட்டியதையடுத்து, அண்மையில் உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், நிகழாண்டு (2020-2021) பாசனத்துக்கான தண்ணீரை திறந்துவிட முதல்வா் கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.

இதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன.8) காலை 9 மணிக்கு அணையிலிருந்து பாசன நீா் திறந்து விடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஜன.8 முதல் மே 22 வரை 135 நாள்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி நீா் தேவைக்கேற்ப திறந்துவிடப்படுகிறது.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கா் விளை நிலங்கள், புதுவை மாநிலத்தில் 1,200 ஏக்கா் விளை நிலங்கள் என மொத்தம் 3,200 ஏக்கா் ஆயக்கட்டு விளைநிலங்கள் பாசனம் பெறும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com