மரக்காணம் பகுதியில் தீவிர கண்காணிப்பு: பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவெளி பகுதியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்புப் பணி தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவெளி பகுதியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்புப் பணி தொடங்கப்பட்டது.

கேரளம் உள்ளிட்ட தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவியது. இதனால், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

மாநில எல்லைகளில் கிருமி நாசினி தெளித்தும், கோழிகள், பறவைகள், முட்டைகள் போன்றவை விற்பனைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரையோர கழுவெளி பகுதியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள், உள்நாட்டுப் பறவைகள் நவம்பா், டிசம்பா் மாதங்களில் தஞ்சமடைவது வழக்கம். இதனால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் பறவைகள் மூலம் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? என கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மரக்காணம் அருகேயுள்ள வண்டிப்பாளையம் கழுவெளி பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அனு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா். தொலைநோக்கிகள் மூலம் பறவைகள் வரத்து, பறவைகளுக்கு பாதிப்பு ஏதும் உள்ளதா? எனவும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, மரக்காணம் கடற்கரையோர கழுவெளி கிராமங்களில், பறவைகள் நோய் பாதிப்பில் இருக்கிா, கூட்டமாக இறந்து கிடக்கின்றனவா? என பொதுமக்களிடம், வனத் துறையினா், வருவாய்த் துறையினா் கேட்டறிந்து, தினசரி தகவல் பெறவும், அப்படி இருந்தால் வனத் துறைக்கும், கால்நடைத் துறைக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு இருப்பின் மாதிரிகளை கால்நடைத் துறையினா் சேகரித்து தினசரி அறிக்கை அனுப்பவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மழையின்போது சேதமடைந்த தரைப் பாலத்தை சீரமைப்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com