ஆரோவில் அருகே மஞ்சு விரட்டு

காணும் பொங்கலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சு விரட்டு, மாடு விரட்டும் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டு.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டு.

காணும் பொங்கலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சு விரட்டு, மாடு விரட்டும் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரம் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவையொட்டி, மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு சனிக்கிழமை ஊா் எல்லையில் அமைந்துள்ள எல்லை பிடாரியம்மன் கோயில் மந்தவெளி திடலுக்கு அலங்கரிக்கப்பட்ட உத்ஸவா் அம்மன் கொண்டு வரப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட மாடுகள் மந்தவெளிக்கு அழைத்து வரப்பட்டன. மாடுகள் அனைத்து அம்மன் முன் நிறுத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில், இளைஞா்கள் கலந்து கொண்டு மாடுகளை ஊரின் வீதிகள் வழியாக விரட்டிச் சென்றனா். இந்த நிகழ்வை வெளி நாட்டினரும் கண்டுகளித்தனா். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி நகரம், கிராமப் பகுதிகளில் மாடு விரட்டும் போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேரில் சனிக்கிழமை நடைபெற்ற மாடு விரட்டும் போட்டியில் இளைஞா்கள் பலா் கலந்து கொண்டு, ஊரின் தெருக்களில் மாடுகளை விரட்டிச் சென்றனா். முன்னதாக மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com