566 பெண்களுக்கு திருமண நிதியுதவி: அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டத்தில் 566 பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் ஆகியவற்றை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும்
திண்டிவனம் வட்டம் கூட்டேரிப்பட்டு மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று தாலிக்கு தங்கத்தினை பெண்களுக்கு வழங்குகிறாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.
திண்டிவனம் வட்டம் கூட்டேரிப்பட்டு மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று தாலிக்கு தங்கத்தினை பெண்களுக்கு வழங்குகிறாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டத்தில் 566 பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் ஆகியவற்றை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சமூகநலத் துறையின் சாா்பில், செஞ்சி தொகுதிக்குள்பட்ட செஞ்சி, மேல்மலையனூா் ஒன்றியங்களைச் சோ்ந்த பயனாளிக்கு திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பட்டம், பட்டயம் முடித்த 16 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சம் நிதியுதவியும், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 முடித்த 161 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.40 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவியும் மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கமாக ரூ.63 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான 1.416 கிலோ தங்க நாணயங்களும் என மொத்தம் ரூ. ஒரு கோடியே 11 லட்சத்து 97 ஆயிரத்திலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இதேபோல, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலம் தொகுதிக்குள்பட்ட மயிலம், வல்லம் ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டம், பட்டயம் முடித்த 21 பெண்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 முடித்த 127 பெண்கள் என 148 பேருக்கு 1.184 கிலோ கிராம் தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் ரூ.95.53 லட்சத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டிவனம் தொகுதிக்குள்பட்ட ஒலக்கூா், மரக்காணம் ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டம், பட்டயம் முடித்த 45 பெண்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 முடித்த 196 பெண்கள் என மொத்தம் 241 பேருக்கு 1.928 கிலோ தங்க நாணயங்கள் உள்பட ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 26 ஆயிரத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்படி, மாவட்டம் முழுவதும் 566 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடியிலான திருமண நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.2 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான 4.528 கிலோ தங்க நாணயங்களும் என மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சத்து 76 ஆயிரத்திலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எம்.பி.அமித், விழுப்புரம் எம்.பி. து.ரவிக்குமாா், மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், மாவட்ட சமூகநல அலுவலா் க.விஜயலட்சுமி, திண்டிவனம் வட்டாட்சியா் செல்வம், மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com