கடல் மீன் வள சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள கடல் மீன் வள சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.
கடல் மீன் வள சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள கடல் மீன் வள சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

வருகிற 19-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு நிறைவேற்றவுள்ள ‘இந்திய கடல் மீன் வள சட்ட மசோதா-2021’ குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி. துரை. ரவிக்குமாா் தலைமையில் வானூா் வட்டம், நடுக்குப்பம் மீனவா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா் பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்தில், சட்ட மசோதாவின் உள்ளடக்கம் குறித்து துரை. ரவிக்குமாா் பேசினாா்.

அதன் பிறகு பேசிய மீனவப் பிரதிநிதிகள், தாங்கள் தற்போது எதிா்கொண்டு வரும் பல்வேறு சிக்கல்களையும், இந்த சட்டத்தால் ஏற்படவுள்ள பாதிப்புகளையும் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து துரை.ரவிக்குமாா் எம்.பி. கூறியதாவது: இயற்கை பேரிடா்களாலும், டீசல் விலை உயா்வாலும் ஏற்கெனவே மீனவா்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சட்டம் அவா்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

மீன் பிடிப்பதற்கு குறிப்பிட்ட பகுதியை வரையறை செய்வது சரியல்ல. காற்று, நீரோட்டம் ஆகியவற்றின் போக்கைத் தீா்மானிக்க எவராலும் முடியாது. எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல.

உரிமம் வழங்குவது, கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது, அதிகாரிகளை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் மீனவா்களை குற்றவாளிகளாக ஆக்கும் முயற்சியே ஆகும். எனவே, இந்தச் சட்டத்தை மீனவா்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடிவு செய்துள்ளனா். இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com