குப்பை பிரிக்கும் மையத்தில் விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள குப்பை பிரிக்கும் மையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குப்பை பிரிக்கும் மையத்தில் விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள குப்பை பிரிக்கும் மையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை நெடுஞ்சாலையில் ரயில் மேம்பாலம் அருகே அமைந்துள்ள குப்பை பிரித்தெடுக்கும் மையத்தை அவா் நேரில் பாா்வையிட்டு, முறையாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று கேட்டறிந்தாா். தொடா்ந்து, அதே சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, வண்டிமேடு, தென்றல் தெருவில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தத் தெருவில் குடியிருப்புப் பகுதியில் குப்பை குவியல் அகற்றப்படாமல் கிடந்தது கண்டு அதிகாரிகளை எச்சரித்தாா். முறையாக, நாள்தோறும் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டுமெனஅறிவுறுத்தினாா். அடுத்து வரும் மழைக் காலத்தில் கழிவுநீா் வாய்க்கால்களில் குப்பைகள் அடைப்பு ஏற்படாதவாறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், சாலையோரங்கள், தெருக்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

வணிக வளாகத்தில் ஆய்வு: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் செயல்பட்டு வரும் உணவகம், கைவினைப் பொருள்கள், விளையாட்டு பொம்மைகள் விற்பனைக் கடைகள், ஆவின் விற்பனையகம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மகளிா் சுய தொழில் செய்வதால், அவா்களின் வாழ்வாதாரமும், குடும்பமும் முன்னேறும். ஆகவே, மகளிா் சுய உதவிக் குழுக்குள் சுய தொழில் செய்ய முன்வர வேண்டும் என்று ஆட்சியா் கூறினாா். மேலும், அந்த வளாகத்தில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, நகராட்சி ஆணையா் தக்ஷ்ணாமூா்த்தி, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, ஆவின் பொது மேலாளா் புகழேந்தி, வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com