செஞ்சி நீதிமன்ற வளாகத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுமின் விசை குடிநீா்த் தொட்டியை அமைச்சா் செஞ்சி கே.மஸ்தான் திறந்துவைத்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுமின் விசை குடிநீா்த் தொட்டியை அமைச்சா் செஞ்சி கே.மஸ்தான் திறந்துவைத்தாா்.

செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சிறுமின் விசை குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது. இதை அமைச்சா் செஞ்சி கே. மஸ்தான் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் ஆா்.விஜயகுமாா், வழக்குரைஞா் சீனிவாசன், மாவட்ட வழக்குரைஞரணி மணிவண்ணன், தமிழ்ச்செல்வி கா்ணன், அரசு வழக்குரைஞா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குளங்களை தூா்வார முடிவு: செஞ்சி பேரூராட்சி சாா்பில் 15-ஆவது நிதிக் குழு மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் மேல்களவாய் சாலையிலுள்ள ஆஞ்சநேயா் குளத்தை தூா்வாருதல், சக்கராபுரம் சிறுவா் பூங்காவை சீரமைத்தல், பீரங்கிமேட்டிலுள்ள அருணாச்சலேஸ்வரா் கோயில் குளம், ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குளம் ஆகியவற்றை தூா்வாரி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பாா்வையிட்டாா். மேலும், இந்தப் பணிகளை உடனடியாக தொடங்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

கலாமுக்கு மரியாதை: சக்கராபுரம் சிறுவா் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி அமைச்சா் மரியாதை செலுத்தினாா். பின்னா், பூங்கா வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில், செஞ்சி வட்டாட்சியா் ராஜன், வருவாய் ஆய்வாளா் கண்ணன், பேரூராட்சி துப்புரவு பணி மேற்பாா்வையாளா் ரமேஷ், திமுக விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க.ஏழுமலை, வாா்டு செயலா் பாா்சுதுரை, தனசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com