நகையை கண்டெடுத்து ஒப்படைத்த டீ கடை தொழிலாளிக்கு பாராட்டு

விழுப்புரத்தில், சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டீ கடை தொழிலாளியை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

விழுப்புரத்தில், சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டீ கடை தொழிலாளியை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

விழுப்புரம், கீழ் வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (45), டீ கடை தொழிலாளி. இவா், இரு தினங்களுக்கு முன்பு பழைய பேருந்து நிலைய பகுதியில் சென்றபோது சாலையில் 10 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்தாா். அது யாருடையது என்று தெரியாத நிலையில், நகையை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.

இதனிடையே, தனது நகை மாயமானதாக பெண் செவிலியா் ஒருவா் காவல் நிலையத்துக்கு வந்து புகாா் செய்தாா். அப்போது, கீழே கிடந்ததாக டீ கடை தொழிலாளி கொடுத்த 10 பவுன் நகையை செவிலியரிடம் போலீஸாா் காண்பித்தனா். அது தன்னுடையதுதான் என்று அந்த செவிலியா் கூறவே, அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா்.

நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விஜயகுமாரின் நோ்மையை போலீஸாா் வெகுவாகப் பாராட்டினா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விஜயகுமாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com