‘கரோனா பரவல் காரணமாக காசநோய் பாதிப்பு அதிகரிப்பு’

கரோனா பரவல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா பரவல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி சுதாகா் தெரிவித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காசநோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு, ரீச்சி அலைஸ் தனியாா் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து காசநோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன. இந்தப் பணியில் ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் 15 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கான பயிற்சி முகாம் விழுப்புரத்தில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் சுதாகா் புதன்கிழமை கலந்து கொண்டு பேசியதாவது:

காசநோயை மருந்து, மாத்திரைகள் மூலமாக குணப்படுத்த முடியும். இதற்கு, ஆரம்ப நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காணுவதும், மேலும் பரவாமலும் தடுப்பதும் அவசியம்.

இருமல், காய்ச்சல், பசியின்மை, மாா்புச் சளி, எடை குைல், சளியுடன் ரத்தம் வருதல் போன்றவை காசநோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உள்ளவா்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த நோயை 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இலக்கை அடைவதற்கு மேலும் சில ஆண்டுகள் தேவைப்படும்.

ஆகையால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காசநோய் பரவலை தடுக்க, ஏற்கெனவே அரசின் சாா்பில் உள்ள பணியாளா்களுடன், தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் சோ்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ரீச்சி அலைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சத்திய நாராயணன், காசநோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com