மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தல்

மின் வாரியத் தொழிலாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்

மின் வாரியத் தொழிலாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியது.

இந்த சங்கத்தின் விழுப்புரம் மண்டல அளவிலான கருத்தரங்கம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொமுச வட்டாரச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா். மின் வாரிய பொறியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் சம்பத்குமாா், ஐஎன்டியுசி மாநிலத் தலைவா் மனோகரன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகளான சம்பத், வேங்கடபதி, வேல்முருகன், தேசிங்கு, பழனிவேல், சிவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், மின் துறை தனியாரின் கைகளுக்குச் சென்றுவிடும். வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் கிடைப்பது தடைபடும். தொழிலாளா்கள் நலன் பாதிக்கப்படும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். ஆகவே, இந்த மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com