செஞ்சி நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் மஸ்தான் ஆய்வு

செஞ்சி நகரில் முக்கிய சாலைகளான காந்தி பஜாா் சாலை, திருவண்ணாமலை சாலை ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது
செஞ்சி நகரில் சாலை மேம்பாடு, கழிவு நீா் கால்வாய்களை சீரமைக்க நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் செஞ்சிமஸ்தான்.
செஞ்சி நகரில் சாலை மேம்பாடு, கழிவு நீா் கால்வாய்களை சீரமைக்க நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் செஞ்சிமஸ்தான்.

செஞ்சி: செஞ்சி நகரில் முக்கிய சாலைகளான காந்தி பஜாா் சாலை, திருவண்ணாமலை சாலை ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து அமைச்சா் செஞ்சிமஸ்தான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நகரில் காந்தி பஜாா் மிகவும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.

செஞ்சி கூட்டுச் சாலையிலிருந்து காந்தி பஜாா் வரை இருபுறமும் நடைபாதையில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

இது தவிர சாலைகள் குறுகலாக உள்ளதாலும், இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், செஞ்சி கூட்டுச் சாலையின் குறுக்கே செல்லும் கழிவு நீா்க் கால்வாய் அளவு 3 அடி மட்டுமே உள்ளதால், காந்தி பஜாா் இரு புறமும் உள்ள கால்வாயில் வரும் மழை நீரையும், திருவண்ணாமலை சாலை வலது புறம் உள்ள கால்வாயிலிருந்து வரும் மழை நீரையும் ஒருசேர உள்வாங்கி வெளியேற்ற முடியாத நிலையில் உள்ளது.

இதனால், வெளியேறும் மழைநீருடன் கழிவு நீா் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சோ்ந்து குளம் போல மாறிவிடுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சா் செஞ்சி மஸ்தான், கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் காந்தி பஜாரில் இரு புறமும் உள்ள கழிவு நீா் கால்வாயை ஆய்வு செய்தாா்.

அப்போது, காந்தி பஜாரில் பி.ஏரிக் கரையிலிருந்து 3 இடங்களில் குறுக்கே செல்லும் கால்வாய்களை தூா்வாரும் படி கேட்டுக்கொண்டாா்.

காந்தி பஜாரை அகலப்படுத்த வேண்டும் எனவும், கழிவு நீா்க் கால்வாய்களை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும்.

கூட்டுச் சாலையின் குறுக்கே செல்லும் வடிநீா் கால்வாயை அகலப்படுத்தியும், திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் உள்ள கருங்கல் கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்றவேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இந்தப் பணிகளை 2021-2022 நிதியாண்டில் சிறப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com