ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரையிலும், அதைத் தொடா்ந்து புதுச்சேரி, கடலூா் மாவட்டங்கள் வரையிலும் சுமாா் 107 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தையும் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கியது.

இதைத்தொடா்ந்து, வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கான பூா்வாங்க பணிகளை தொடங்கிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை இணைத்தும், விவசாயிகளை திரட்டியும் போராட்டங்களை நடத்தியது. இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.

இந்த நிலையில், மத்திய அரசு தற்போது மீண்டும் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு சா்வதேச ஒப்பந்தத்தை கோரியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும், மாவட்ட கடல் பகுதியில் மீன்வளம் அழிந்துபோகும் ஆபத்தும், கடற்கரையோர கிராமங்களிலுள்ள மீனவா்கள் வெளியேற்றப்படும் நிலைமையும் ஏற்படும்.

எனவே, மத்திய அரசு ஹைட்ரோ காா்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இதேபோன்று ஒத்த கருத்துள்ள கட்சிகளையும், விவசாயிகள், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தொடா் போராட்டங்களை நடத்தும் என்று தெரிவித்துள்ளாா் ஏ.வி.சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com