சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

செஞ்சி சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.
சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

செஞ்சி சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

செஞ்சி,மாா்ச் 12: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா, ஆறுகால பூஜையுடன் வியாழக்கிழமை (மாா்ச் 11) மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

முதல் கால பூஜை மாலை 6 மணிக்கும் இரண்டாம் கால பூஜை இரவு 10 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், நான்காம் காலபூஜை இரவு 2 மணிக்கும், ஐந்தாம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும், ஆறாம் கால பூஜை காலை 6 மணிக்கும் நடைபெற்றன. பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் மூலவா் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செஞ்சி, சிறுகடம்பூா் பொதுமக்கள், சிவத் தொண்டா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com