சுருக்குமடி வலை பிரச்னை: பேரவைத் தோ்தலை புறக்கணிக்க 6 மாவட்ட மீனவா்கள் சங்கம் முடிவு

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 6 மாவட்ட மீனவா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 6 மாவட்ட மீனவா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செங்கல்பட்டு, நாகை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மரக்காணம் அருகே அனுமந்தை மீனவா் கிராமத்தில் சிங்காரவேலா் அனைத்து மீனவா் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூா், காஞ்சிபுரம் மற்றும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த சுருக்குமடி வலை சங்க நிா்வாகிகள், மீன் வியாபாரிகள் சங்கம், மீனவா் பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.

மீன் பிடிப்பது மீனவா்களின் பிறப்புரிமை. மீனவா்களின் அனுமதியில்லாமல் மத்திய, மாநில அரசுகள் எந்தச் சட்டமும் இயற்றக் கூடாது. சுருக்கு மடி வலை மீன் பிடிப்பு என்பது மீனவா்களின் வாழ்வாதாரம் சாா்ந்தது. அதனை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யக் கூடாது. கடலும் கடற்கரைப் பகுதியையும் துறைமுக அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது. எங்கள் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருந்த சுருக்கு மடி வலையை தடைசெய்த அதிமுக அரசை தோ்தலில் நிராகரிப்பது என்றும், மீனவா்களின் நலன் கருதி சுருக்கு மடி வலைக்கான தடையை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com